கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அச்சத்தால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளால் ஆதரவற்று நிற்கும் 12 வயது சிறுவன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று தங்களது உயிரை வெவ்வேறு விதங்களில் மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பனிராஜிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இருவரும் தாயார் உயிர் இழந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரும் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஒரு 12 வயது மகன் இருந்துள்ளார், தற்பொழுது பெற்றோர்கள் இல்லாத நிலையில் சிறுவன் ஆதரவற்ற நிலையில் உள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…