நீரில் மூழ்கிய 22 வயதை நபரை உடனடியாக ஆற்றில் குதித்து 12 வயது சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான நபர் ஒருவர் பாலத்தில் இருந்து கோசி ஆற்றில் குதித்துள்ளார். அதனையடுத்து அந்த நபர் உதவிக்காக அழுத போது, அங்கிருந்த பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
அந்த சமயத்தில் பாலத்தில் நண்பருடன் பேசி கொண்டிருந்த 12 வயதான சன்னி என்ற சிறுவன் அந்த நபர் அழுவதை கண்டு உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் நடு ஆற்றில் நீரோட்டத்தில் சிக்கி மயக்கத்தில் இருந்த அவரை சிறுவன் கரைக்கு கொண்டு சேர்க்க 15 நிமிடங்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ராம்நகர் காவல்நிலைய அதிகாரி ரவி சைனி கூறுகையில், சன்னி என்ற உடனடியாக குதித்து அந்த நபரை காப்பாற்றவில்லை என்றால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றும், அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். தன்னை விட இருமடங்கு பெரியவரை காப்பாற்றிய 12 வயது சிறுவனின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…