Mumbai: சிக்கன் ஷவர்மா சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது, மும்பையில் சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.
மும்பையின் கோரேகான் பகுதியில் தெரு உணவை சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில் ‘ஃபுட் பாய்சன்’ சம்பந்தமான அறிகுறைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சாட்டிலைட் டவரில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த காலங்களில் இந்த ஆசிய நாட்டு உணவு வகையான “சிக்கன் ஷவர்மாவை” சாப்பிட்டு, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர் கதையாகி வருகிறது, அந்த உணவில் இறைச்சியானது சரியாக வேகாமல் இருப்பதால், ஃபுட் பாய்சன் காரணமாக இது போன்ற மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அந்த வகையில், மும்பையில் இப்பொழுது 12 நோயாளிகளில் 9 பேர் ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் மீதமுள்ள மூன்று பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…