ஒரே இரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ….!
மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்பொழுது தேசிய மக்கள் கட்சி கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கான்ரட் கொங்கல் சங்மா என்பவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி தான்.
இந்த கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏ -க்கள் உள்ளனர். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் திடீரென நேற்று ஒரே நாளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி முகுல் சங்மா உட்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரே நாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.