12 பேர் உயிரிழப்பு – கொரோனாவும் இல்லை, டெங்குவும் இல்லை …!
கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு பாதிப்பு எதுவுமில்லாமலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மர்மமான வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னும் கொரோனாவின் தாக்கமே குறையாத நிலையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகரில் உள்ள குர்சாலி கிராமத்தில் 12 பேர் கொரோனா தொற்று மற்றும் டெங்கு அறிகுறி இல்லாமல் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.
மர்மமான வைரஸால் தாக்கப்பட்டு இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், இறந்தவர்கள் யாருக்குமே டெங்கு தொற்று இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபேஷ் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.