அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 3)-ஆம் தேதி பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் லாரியும் மோதியதில் 5 பெண்கள் மற்றும் ஒரு மைனர் பையன் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்று செல்லும் பேருந்து 45 பேருடன் கோலாகாட்டில் இருந்து டின்சுகியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் எதிர் திசையில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. அந்த லாரியின் மீது பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.
பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள். காயமடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்ட இந்த பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் பரலுகுவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்எனவும், அவர்கள் தின்சுகியாவில் உள்ள திலிங்க கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது எனவும் அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர்.
கவனக்குறைவாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதால் மரணம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையைத் தொடங்குவோம் என்றும் கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…