#BREAKING: +12 பொதுத்தேர்வு -பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.
கொரோனா வைரஸ் சூழலுக்கு மத்தியில் சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு மற்றும் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தங்கள் பதிலை இரண்டு நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கு என்பது நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வரயுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை ஈடுபட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபடயுள்ளார்.