12 இலக்க எண்கள் எல்லாம் ஆதார் எண் அல்ல – யுஐடிஏஐ எச்சரிக்கை…!

Default Image

12 இலக்கம் கொண்ட எண்கள் அனைத்தும் ஆதார் எண்கள் அல்ல என யுஐடிஏஐ எச்சரித்துள்ளது.

ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க தனித்துவ எண்கள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த 12 இலக்க எண்கள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் யுஐடிஏஐ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண் இல்லை எனவும் ஆதார் எண்கள் குறித்த உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு சில தகவல்களையும் கொடுத்துள்ளது. அதன்படி resident.uidai.gov.in/verify என்னும் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று, ஆதார் 12 இலக்க குறியீட்டை உள்ளிட வேண்டும்.

அதன் பின்பதாக சரிபார்ப்புக்கான குறியீட்டை அழுத்தி, தொடரவும் என்பதை கிளிக் செய்தால் உண்மையான ஆதார் எண் தானா என்பது நமக்கு தெரிந்துவிடும். மேலும் ஆதார் குறித்ததான அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை பெற 1947 எனும் கட்டணமில்லா எண்ணை  அழைத்து பேசலாம் அல்லது help@uidai.gov.in எனும் மெயில் ஐடி மூலமாகவும் நமது கேள்விகளை கேட்கலாம்.

இந்த 1 47 எனும் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் உதவிகளை வழங்குகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்