12 வயது சிறுமியை மிரட்டி2 மாதம் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!5 சிறுவர்கள் கைது..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புனனூர் கிராமத்தில் பகத்சிங் நகரில் குடியிருக்கும் சிறுவர்கள் 5 பேர் அதே பகுதியில் குடியிருக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். குறித்த சிறுவர்கள் 5 பேரும் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்கள் எனவும், தங்களது மொபைல் போனில் பல எண்ணிக்கையிலான ஆபாச வீடியோக்களையும் சேகரித்து வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களை வீடு புகுந்து தாக்கினர். அவர்களின் ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை மீட்டுள்ளனர். எஞ்சிய மூவரையும் பின்னர் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.பின்னர் 5 சிறுவர்களையும் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சமர்ப்பித்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்