#BigBreakingNews : மத்திய அரசு – விவசாயிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.ஆனால் திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளன.கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ,இதில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக தனியாக குழு அமைத்து அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காணலாம் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
ஆகவே இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் ,மத்திய அமைச்சர்கள் நரேந்தர் சிங் தோமர்,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆனால் இந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் தோல்வி அடைந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025