மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சார்ந்தவர் நீரஜ் மால்வியா. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் நீரஜ் மால்வியா நேற்று திடீரென தனது வீட்டில் இருந்து மண்டபத்திற்கு ஒடி வந்து உள்ளார்.
நீரஜ் மால்வியா மண்டபத்திற்கு ஒடி வந்ததால் அவரின் பின்னால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ஓடி வந்துஉள்ளனர். இதனை பார்த்த மற்றவர்கள் நீரஜ் மால்வியா எதையோ திருடிக்கொண்டுதான் ஓடுகிறார் என நினைத்து கொண்டனர்.
பின்னர் மண்டபத்திற்கு சென்று மணமகளுக்கு தாலி கட்டினார்.திருமணம் முடிந்த பிறகு இதுகுறித்து அவரிடம் கேட்டபோது , உடற்பயிற்சி பயிற்சியாளரான நான் விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜாக்கிங் செல்வது போல் ஓடினேன் என கூறினார்.
இதுகுறித்து மணமகளின் தந்தை கூறுகையில் எனது மாப்பிள்ளையை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. ஆரோக்கியத்தின் விழிப்புணர்விற்காக அவர் இவ்வாறு செய்தார் என கூறினார்.அவரின் வீட்டிற்கும் திருமண மண்டபத்திற்கும் 11 கிலோமீட்டர் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…