119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி உயிரிழந்தார்!
பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் 80 வயதை தாண்டி வாழ்ந்தாலே ஆச்சரியமாக பார்க்கக்கடிய அளவிற்கு மனிதர்களின் வாழ்நாள் காலம் மிக குறைந்து விட்டது. இந்த நேரத்தில் 100 வயதிற்கு மேல் தாண்டி வாழ்பவர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து கூடியவர்களாக தான் இருக்கின்றனர். அவ்வாறு 119 வயதை கடந்து வாழ்ந்தவர் தான் பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பச்சன் கவுர். மொஹாலி மாவட்டத்தின் மோட் மஜ்ரா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரக் கூடிய மிகப் பழமையான இந்திய ஆயுதப் படையை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் தான் பச்சன் கவுர். இவரது கணவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். இரண்டு உலகப் போர்களில் சண்டையிட்ட போராளியாக அவரின் கணவர் திகழ்ந்துள்ளார்.
9 குழந்தைகளுடன் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வந்த கவுரின் கணவர் 106 வயதில் உயிரிழந்துள்ளார். பச்சன் கவுர் 119 வது வயதில் தற்பொழுது இயற்கை எழுதியுள்ளார். இவர் உயிரிழந்தது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், அவரது குடும்பத்தினர் இதுவரை அவர் வாழ்ந்ததை எண்ணி அவரது இறுதி ஊர்வலத்தில் இசைக் குழு மற்றும் நடனத்துடன் அவரை சந்தோசமாக வழி அனுப்பி வைத்துள்ளனர்.