"119 இடங்களில் 103_வது இடம்" பட்டினிக்குறைபாட்டில் மோசமான நிலை..!!
உலகளவிலான பட்டினி குறியீடு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தாண்டின் உலக பட்டினி குறியீடு தற்போது 119 நாடுகளில் நடத்தப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த குறியீட்டில் இந்தியா ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து மோசமான நிலையை அடைந்துள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட 119 நாடுகளில் இந்தியா 103வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியா கடந்தாண்டு இருந்ததை விட 3 இடங்கள் பின் தங்கியுள்ளது. கணக்கெடுப்பின்படி, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் இருப்பது அதிகரித்து வருவது இந்த உலக பட்டினி குறியீட்டில் தெரியவந்துள்ளது. உலக பட்டினி குறியீடு கணக்கீட்டில் தெற்கு சூடான் மிக மோசமடைந்து கடைசி நாடாக உள்ளது. ஊட்டச்சத்து உள்ள சரிவிகித உணவு குழந்தைகளுக்கும் மற்றும் பேறுகால தாய்மார்களுக்கும் இல்லாமல் இருப்பதே இந்த குறைபாட்டிற்கு பெரும் காரணமாக உள்ளது.
DINASUVADU