1,178 ட்விட்டர் கணக்கு நீக்கம்? மத்திய அரசுக்கு ட்விட்டர் நிர்வாகம் பதில்!

1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என மத்திய அரசின் புகாருக்கு ட்விட்டர் நிர்வாகம், “ட்விட்டர் விதிகளை மீறினால் நிச்சியம் அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும்” என்று பதிலளித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், 80-க்கும் மேற்பட்ட நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் வேளாண் சட்டங்களை ரத்து செய்த நிலையில், அதனை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து பொய்யான மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தகவல்களை பரப்பியதற்காக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, புகார் ஒன்றினை அளித்துள்ளது.
இந்த 1,178 ட்விட்டர் கணக்குகள், பாகிஸ்தான், காலிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு பயன்பாட்டாளர்கள் என்று மத்திய அரசு அந்த புகாரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் நிர்வாகம், “ட்விட்டர் விதிகளை மீறினால் நிச்சியம் அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படும்” என மத்திய அரசின் புகாருக்கு பதிலளித்துள்ளது.