பேஸ்புக்’ மூலம் பயங்கரவாத தூண்டல்..காஷ்மீரில் பெண் கைது…!!

Default Image
பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டியதாக காஷ்மீரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு காஷ்மீர் மாநிலம் பண்டிபூர் மாவட்டத்தை சேர்ந்த, சாஷியா என்கிற பெண் ‘பேஸ்புக்’ மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவருடைய ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி அவரை கைது செய்தனர்.அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்–இ–முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்