வங்கியிலிருந்த 20 லட்சம் பணத்தை கொஞ்சமும் அசராமல் ஆட்டையை போட்ட 11 வயது சிறுவனின் செயல் சிசிடிவியில் சிக்கியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் எனும் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை வங்கியில் தற்பொழுது ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சாதாரணமாக நுழையும் சிறுவன் கிட்டத்தட்ட 20 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து தான் எடுத்து சென்ற பையில் எடுத்து வைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியிலிருந்த வங்கி காவலர்களை தாண்டி சாதாரணமாக தான் சென்றுள்ளார். இந்நிலையில் அன்று மாலை வங்கி ஊழியர்கள் தங்கள் வசூலித்த பணத்தை சரியாக இருக்கிறதா என்பதற்காக எண்ணிய பொழுது மிக அதிக அளவில் பணம் குறைந்தது கண்டு மீண்டும் மீண்டும் பணத்தை அடிக்கடி எண்ணியுள்ளனர். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அதே அளவு பணம் குறைந்ததால் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்பொழுது சாதாரணமாக வந்த 11 வயது சிறுவன் தான் பணத்தை தனது பையில் வைத்து வெளியேறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கூறிய வங்கி மேலாளர் விஸ்வஜித் அவர்கள், சிறுவன் ஐந்து, ஐந்து லட்சமாக நான்கு மூட்டைகளில் பணத்தை வைத்து திருடிச் சென்றுள்ளார். வங்கியில் கூட்ட நெரிசலாக இருந்ததால் பணத்தை வைக்க கூடிய வங்கி காசாளர் தனது அறையை பூட்ட மறந்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்த வங்கிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அசால்டாக வங்கியில் வேலை செய்யக்கூடிய காசாளர் இனி கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள சம்பவம் தொடர்பாகவும் அந்த சிறுவன் யார் எனவும் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது 380 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…