சத்தீஸ்கரில் 11 வயது மட்டுமே ஆகக்கூடிய ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவன் தற்பொழுது நடைபெற்று வரும் கல்வி ஆண்டிறகான பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
ஆயிரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதுபோல அறிவு கூர்மை அதிகம் இருக்கிறது என்று சோதிக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களது தகுதியையும் மீதி அதற்கு முந்தய வகுப்புகளை படிக்கக் கூடிய வாய்ப்புகளை சில சமயங்களில் பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் எனும் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது மட்டுமே ஆகக்கூடிய சிறுவன் இந்த வருடம் நடைபெறக்கூடிய பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து மாநில மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரிகள் கூறுகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது வழக்கத்தில் இருக்கிறது.
ஆனால், நாங்கள் இந்த சிறுவனை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இவருக்கு 16 வயது சிறுவனுக்கு சமமான ஐ.க்யூ இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து தான் இவர் இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை குர்விந்தர் சிங் அவர்கள் கூறுகையில், தனது மகன் ஏற்கனவே இந்த தேர்வுக்கு தயாராகி விட்டதால் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததாகவும், அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே சிக்கலான கணித பிரச்சனைகளை கூட சில நொடிகளில் தீர்க்கக்கடிய அறிவு கொண்டவராக இருந்ததைத் தான் கண்டதாகவும் தெரிவித்த அவர் அவனுக்கு அழுத்தம் கொடுக்காமல் மேலும் அவரை உற்சாகப்படுத்தினோம் என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…