ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

PM Modi jaipur Accident

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, சுமார் 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில், 28 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விடிய காலையே நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. முதற்கட்ட தகவல்களின்படி, மற்ற வாகனங்கள் மீது மோதிய லாரியில் ரசாயனம் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிர் இழந்தது ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்