கொரோனா பாதிப்பில் 11% பேர் 20 வயதுக்கும் குறைவானோர் – மத்திய சுகாதார அமைச்சகம்
12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க கெடிலா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11% பேர் 20 வயதுக்கும் குறைவாக உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2 வயது முதல் 18 வயது வரையில் உள்ளவர்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க கெடிலா நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 2 நிறுவனங்களின் தடுப்பூசிகளும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.