அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்த 11 எம்.எல்.ஏக்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் 11 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று அமித் ஷா முன்னிலையில் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து ஆதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையாக சாடினார். ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறி பேசத்தொடங்கிய அவர், பேரணியின் முடிவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ ஆகியவை கூறி உரையை முடித்தார்.