கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…! ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்..!
மத்திய பிரதேசத்தில் கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 11 பேரின் குடுமபத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்.
மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது.
அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்த போது அந்த சுவர் திடீரென சரிந்தது. இதனால் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Anguished by the tragedy in Vidisha, Madhya Pradesh. My condolences to the bereaved families. An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 16, 2021