ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் புதன் கிழமை அன்று மினி பஸ் ஒன்று பள்ளத் தாக்கில் விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் சாவ்ஜியான் கிராமத்தில் மினி பஸ் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அப்பகுதி மக்கள் மற்றும் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பலர் மாண்டி யிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாண்டி தாசில்தார் ஷெஹ்சாத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இது குறித்து கூறும் போது, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விபத்தில் இறந்தவர்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “பூஞ்ச் மாகாணத்தில் உள்ள சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி கூறியதாவது, “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…