கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு!

கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகரித்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆந்திரா தெலுங்கானா ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் டோலி சவுக்கி எனும் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகள் சேதம் அடைந்து, வீடுகளில் மழை நீர் புகுந்ததால் தலைமை செயலாளர் சுரேஷ்குமார் அவர்கள், எம்பிக்கள் போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர் எப்பொழுதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை தெலுங்கானாவில் பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர உள்ளதால் மழையின் தாக்கம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.