பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரண்..!

Bilkis Bano

2002-ல் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் பரவியது. அப்போது பில்கிஸ் பானு  ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். மேலும், அந்தக் கும்பல் பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும்  கொன்றது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் குஜராத்தின் பஞ்சமஹால் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் மாநில அரசு விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் விடுதலை செல்லாது என கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்து அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரம்..!

இதற்கிடையில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் 3 பேர் கூடுதல்  கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரர்கள் கூறிய காரணங்கள் விசாரிக்க உகந்தவை அல்ல என மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரும் குஜராத்தின் பஞ்சமகால்  மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிளைச்சிறையில் சரணடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்