5 முதியவர்கள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் 11 வயது சிறுமியை தொடர்ந்து 9 மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் தாயுக்கு மகளாக உள்ள 11 வயது சிறுமியை, மஞ்ஜி ஜாவியா (67), அரவிந்த் குபவத் (52), விஜயானந்த் மையத் (52), விபுல் சவ்டா (40), கோவிந்த் சக்காரியா (60) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை அடிக்கடி தனியாக அழைத்துக்கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவருடைய தாய். அப்போது அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்தனர். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாய் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிறந்த குழந்தைக்கு முதுகெலும்பு மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தை இரண்டு கால்களும் போதுமான வளர்ச்சி இல்லாமல் இருப்பதாகவும் கூறினர். இதனால் அந்த குழந்தை நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது எனவும் தெரிவித்தனர்.
11 வயது சிறுமிக்கு பிறந்த அந்த குழந்தை தங்களுக்கு வேண்டாம் என சிறுமியின் தாயும் அவருடைய பாட்டியும் தெரிவித்துள்ளனர். 11 வயது சிறுமியால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அந்த குழந்தை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு தனது பேத்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என சிறுமியின் பாட்டி மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதனால் குந்தையை ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை நீண்ட நாட்கள் உயிரோடு இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 5 முதியவர்களும் பாலியல் வன்முறை வழக்கு மற்றும் குழந்தைகள் பாதுகப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அந்த 17 வயது சிறுவன், சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…