இன்று திட்டமிட்டப்படி பத்தனம்திட்டா மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ..!
இத்தாலியில் இருந்து கேரளாமாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேருக்கும் அவர்களின் உறவினர் 2 பேர் என 5 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து வரும் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேரளா மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கே.கே.ஷைலஜா ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மூன்று நாட்களுக்கு விடுமுறை என கலெக்டர் நூஹூ நேற்று வெளியிட்டார்.
மேலும் இன்று தொடங்க உள்ள 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தார். அடுத்த அறிவிப்பு வரும்வரை பத்தனம்திட்டா முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாகவும் அறிவித்தார்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.