ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது.
ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது.
இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முன் பிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதரஸா கல்வி வாரிய தேர்வுகளும் ரத்து என்று கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் புதன்கிழமை அறிவித்தார்.
மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தேர்வு குழுவின் விதிகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.கொரோன நிலைமை மேம்படும் போது மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வு எழுதலாம் , “என்று டாஷ் மேலும் கூறினார்.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,851 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டது மேலும் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…