கர்நாடகாவில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு.!
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு தேதி வெளியிடப்பட்டது.
கர்நாடகாவில் பள்ளிக் கல்வித் துறை எஸ்.எஸ்.எல்.சி- 2020 துணை தேர்வின் அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து ஆன்லைனில் kseeb.kar.nic.in இல் தெரிந்துகொள்ளலாம் .
நடந்த முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியருக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் அட்டவணையின்படி, கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 28 வரை நடத்தப்படும். தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும், தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.