ராஜஸ்தானில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து…!
ராஜஸ்தான் அரசு அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நேற்று கல்வித்துறை அதிகாரிகள், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் அரசு அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.