10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ல் தொடங்கி ஜூன்7 வரையிலும்,12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரை நடைபெரும் என்று சிபிஎஸ்இ நிவாகம் அறிவித்துள்ளது.
ஆனால்,இந்தியாவில் கொரொனோ 2ம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.கடந்த 24மணி நேரத்திற்குள் 1,6,912பேர் கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது.
இதனால்,மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும், என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.இக்கடிதத்துடன் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் வேண்டாம் என்று 1லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்ட மனுக்களை இணைத்துள்ளார்.
மேலும்,கொரொனோ வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவும் இந்த வேளையில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைத்தால், மாணவர்கள் கொரொனோ பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.அப்படி நேர்ந்தால் அதற்கு சட்டப்படி மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும்தான் பொறுப்பேற்க வேண்டும்,என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…