பாஜக-வில் இணைய 10 கோடி ருபாய் பேரம் : அதிர்ச்சி தகவல்
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்ககோரி ஹர்திக் படேல் என்பவர் போராட்டங்கள் நடத்தினார். இதனால் இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூட ஆரம்பித்தது. இதனால் ஒரு போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக கூறி ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது
.
இதனிடையே, இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஆதலால், இவர்மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்று கொண்டது.
இந்நிலையில் நேற்று ஹர்திக் படேலின் ஆதரவாளர்களாக கருதப்படும் வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
மற்றொரு நபரான நரேந்திர படேல், இன்று பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் ” தான் பா.ஜ.க.வில் இணைந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் அக்கட்சியிலிருந்து தந்ததனர்”-என தெரிவித்தார்.
இந்த அதிரடி பேட்டியை தொடர்ந்து, ஏற்கனவே பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு படேல் தலைவர் நிகில் சவானி கட்சியிலிருந்து விலகினார்.