109 நாள் உண்ணாவிரதம் "கங்கையை சுத்தப்படுத்த கோரி" உயிரிழந்தார் ரிஷிகேஷில்..!!

Default Image

தன்னார்வலர் ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22ம் தேதியிலிருந்து அரசாங்கம் கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய 87வது வயதில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
அனைவராலும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 109 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூய்மை கங்கை தன்னார்வலர் ஜி.டி அகர்வால் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் நீரில், தேன் கலந்து மட்டும் அருந்தி வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதையும் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஜி.டி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, வழக்கறிஞர் மற்றும் தன்னார்வலரான பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில், சூற்றுச்சூழல் ஆய்வாளர்களுக்கு முன்னோடியான ஜி.டி அகர்வால் கடந்த 109 நாட்களாக கங்கையை அரசாங்கம் தூய்மைபடுத்த வேண்டுமென்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரை நேற்று உத்திரகாண்ட் போலீசார் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மோடியின் செவிட்டு காதில் கங்கையை தூய்மைப்படுத்த இவர் வைத்த கோரிக்கை விழுந்த பின் இன்று உயிரிழந்துள்ளார். ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்