கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டம் வென்ற 108 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்.!

Default Image

கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தால் 108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமாரதா திம்மக்காவிற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

கர்நாடகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான “சாலுமாரதா” என்று அழைக்கப்படும் திம்மக்காவிற்கு கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம் (சி.யு.கே) முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. சாலுமாரதா என்றால் மரங்களின் வரிசை என்று பொருளாம். மரங்களின் தாய் என்று அழைக்கப்படும் 108 வயதான திம்மக்கா இதுவரை கிட்டத்தட்ட 400 ஆலமரங்களை தனது கணவரின் சொந்த ஊரான துமகுரு மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஹுலிகலுக்கும் குடூருக்கும் இடையில் வளர்ந்துள்ளார். குழந்தைகள் இல்லாத இந்த தம்பதியினரின் மாலை நேரம் மரங்களை பேணுவதிலையே செலவிட்டுள்ளனர் .

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மஸ்ரீ விருது உட்பட கர்நாடகா ராஜ்யோத்சவ விருது, ஹம்பி பல்கலைக்கழகத்தின் நடோஜா விருது, இந்திய அரசின் தேசிய குடிமகன் விருது உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். பலருக்கு உத்வேகமாக இருந்த இவருக்கு சனிக்கிழமையன்று பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து முனைவர் பட்டம் வழங்கி பாராட்டியுள்ளனர்.

இதில், சி.யு.கே.யின் துணைவேந்தர் எச்.எம்.மஹேஸ்வரையா, மொழியியல் பேராசிரியர் ராஜேஸ்வரி மகேஸ்வரியா, பசவராஜ் பி டோனூர், டீன், மனிதநேயம் மற்றும் மொழிகள் பள்ளி, மற்றும் இணை பேராசிரியர் விக்ரம் விசாஜி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 2019ஆம் ஆண்டு திம்மக்கா ராஷ்டிரபதி பவனில் மரக்கன்றுகளை நட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பத்மஸ்ரீ விருதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்