இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், இந்தியாவில் ஒரே நாளில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று தொற்று பாதிப்பு 10,753 ஆக குறைந்துள்ளது. இதுபோன்று, கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498 லிருந்து 53,720 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை 5,31,064 லிருந்து 5,31,091 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,97,269 லிருந்து 4,48,08,022 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,456 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 6,626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…