டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. அந்தவகையில், அங்கு புதிதாய் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,32,275 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,135 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,17,507 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,881 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 10,887 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.