தவறான தகவல் பரப்பிய 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்- மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்.!
தவறான தகவல்களை பரப்பியதற்காக 104 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல்களுக்கு வரைமுறையோ எந்தவித கட்டுப்பாடோ பெருமளவில் வகுக்கப்படவில்லை, இதனால் பல யூடியூபர்கள் போலியான தகவல்களை பரப்புவதற்காக சேனல்கள் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மக்களும் எது சரியான செய்தி என்று அறியாமலே தாங்கள் பார்த்த வீடியோவில் வரும் செய்தி உண்மை என நம்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி 104 யூடியூப் சேனல்கள் மற்றும் 45 வீடியோக்களையும் மத்திய அரசு முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் ஏற்கனவே தவறான தகவல் பரப்பியதற்காக 30 கோடி பார்வையிடப்பட்ட மற்றும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட மூன்று யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.