கொரோனாவை வென்ற 101 வயது கர்நாடகாவின் மூதாட்டி!
தனது 101 வயதிலும் கொரோனா வைரஸை வென்று வீடு திரும்பியுள்ள கர்நாடகாவின் மூதாட்டி.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி எனும் கிராமத்தினை சேர்ந்த ஹல்லம்மா எனும் 101 வயதுடைய மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 7 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்பொழுது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக இவர் மீண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மூதாட்டி ஹல்லம்மா கூறுகையில், நான் இப்பொழுது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன், மருத்துவர்கள் என்னை நன்றாக கவனித்து கொண்டார்கள் என கூறியுள்ளார்.