President Droupadi Murmu [Image source : PTI]
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்து வருகிறது.
மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றது. இது நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். இந்த நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
இதனையடுத்து குடியரசு தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு-மைல்கல்லை எட்டுவதற்கு எங்கள் வீரர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு, திறமை மற்றும் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகத்தான சாதனை படைத்த ஒட்டுமொத்த இந்தியக் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் ஒவ்வொருவராலும் தேசம் மிகவும் பெருமை கொள்கிறது. நீங்கள் தொடர்ந்து முன்னேறி, எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த சாதனைகளை அடைய விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…