இந்தியாவுக்கு 100-வது பதக்கம்..! குடியரசு தலைவர் வாழ்த்து..!

Droupadi Murmu

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்து வருகிறது.

மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றது. இது நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 100-வது பதக்கம் ஆகும். இந்த நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

இதனையடுத்து குடியரசு தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த  பதிவில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு-மைல்கல்லை எட்டுவதற்கு எங்கள் வீரர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு, திறமை மற்றும் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

மகத்தான சாதனை படைத்த ஒட்டுமொத்த இந்தியக் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் ஒவ்வொருவராலும் தேசம் மிகவும் பெருமை கொள்கிறது. நீங்கள் தொடர்ந்து முன்னேறி, எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த சாதனைகளை அடைய விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்