ஹெச்பி ஸ்மார்ட் சிம் லைஃப் என்னும் இந்த சலுகையில் தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்புடன், 100ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை பயனர்களுக்கு அளிக்கிறது.
தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களுடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா சலுகை பொருந்தும்.ஹெச்பி லிருந்து ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்பை வாங்கினால், 100ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம்.
புதிய HP LTE லேப்டாப்புடன் புதிய ஜியோ சிம்மிற்குச் சந்தா செலுத்தினால், 365 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது தகுதியுள்ள HP மடிக்கணினிகளை மட்டுமே பொருந்தும்.
தற்போது, HP 14ef1003tu மற்றும் HP 14ef1002tu இந்த இரண்டு தகுதியான மாடல்களை பயனர்கள் வாங்கம்போது இலவச டேட்டா பெறலாம்.
நீங்கள் தகுதியான லேப்டாப்பை வாங்கும் போது, கூடுதல் கட்டணமின்றி புதிய ஜியோ சிம்மைப் பெறலாம். இச்சலுகை 1 வருடத்திற்கு 100 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது, இதன் மதிப்பு ரூ.1500. 100 ஜிபி டேட்டா முடிந்ததும், இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
கூடுதல் அதிவேக 4G டேட்டாவிற்கு, MyJio அல்லது Jio.com இலிருந்து கிடைக்கும் டேட்டா பேக்குகள் மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்து, அதிக வேகத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம்.
ஆஃப்லைனில் புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை வாங்கும் போது இச்சலுகையை பெற அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்குச் சென்று HP Smart LTE 100 GB டேட்டா ஆஃபரில் (FRC 505) புதிய ஜியோ சிம்மை பெற ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் நிர்வாகியை அணுகவும்.
ஆவணங்களுக்கு உங்கள் விவரங்களைக் கொடுங்கள்.
வெற்றிகரமாக சிம் செயல்படுத்தப்பட்டவுடன், HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் சிம்மைச் செலுத்தி அதிவேக மற்றும் இலவச டாட்டாவை அனுபவிக்கவும்.ஆன்லைன் பர்ச்சேஸ்களுக்கு — புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை வாங்க reliancedigital.in அல்லது JioMart.com க்குச் சென்று ஆர்டர் செய்யவும்.
லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டவுடன், வாங்கிய 7 நாட்களுக்குள் லேப்டாப் பில் மற்றும் லேப்டாப்புடன் அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்குச் செல்லவும்.பிறகு HP Smart Sim லேப்டாப்பில் 100 GB டேட்டா ஆஃபரில் (FRC 505) புதிய ஜியோ இணைப்பைச் செயல்படுத்துமாறு ஸ்டோர் எக்ஸிகியூட்டிவ்விடம் கேட்கலாம்.
ஆவணங்களுக்கு உங்கள் விவரங்களைக் கொடுங்கள்.
சிம் இயக்கப்பட்டதும், சிம்மை ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் செலுத்தி அதிவேக மற்றும் இலவச டாட்டாவை அனுபவிக்கவும்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…