10, 000 கி.மீ தொலைவிற்கு எரிவாயு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது- குடியரசுத் தலைவர்..!

draupadi murmu

நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ” மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  சீரமைப்பு, செயல்பாடு மாற்றியமைத்தல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பான அடித்தளத்தை இந்தியா அமைந்துள்ளது. மத்திய அரசு சிறப்பான முறையில் மிகவும் வெளிப்படையாக செயல்படுகிறது. இந்தியாவின் ஆயுத தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  செல்போன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் – குடியரசுத் தலைவர்..!

பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.  2 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.’ நீதியே முதன்மை’ என்ற கொள்கையில் புதிய நீதித்துறை நெறிமுறையை நாடு பெற்றுள்ளது. டிஜிட்டல் தளம் மிகவும் பாதுகாப்பானதாக மாறி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பழங்குடியினர் உரிமையைப் பெறுவார்கள், ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் முத்தலாக்கிற்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியது, டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. உலக அளவில் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. கடந்த மாதம் மட்டும் ரூ. 1,200 கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய சாதனை நடந்தது.  இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழைகளின் முன்னேற்றத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பாதிக்காத வகையில் அரசியல் செயல்பட்டது.

இரண்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் சுய உதவி திட்டங்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டு மக்கள் நலனில்  மத்திய அரசு கவனம் செலுத்தியது. தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் 10,000 கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.  கடந்த பத்து ஆண்டுகளில் கிராமப்புற சாலைகளின் நீளம் 4 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்ந்துள்ளது” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்