10000 படுக்கை வசதி , 600 கழிவறைகள் ! டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கான மிகப்பெரிய மருத்துவமனை
கொரோனாவிற்கான மிகப்பெரிய மருத்துவமனை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.தற்போதைய நிலவரப்படி டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,188 ஆக உள்ளது.மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் போதிய இட வசதிகள் இல்லை.
எனவே டெல்லியில் உள்ள சதர்பூர் பகுதியில் 10,000 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனை தான் ,கொரோனவிற்காக உலகம் முழுவதும் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளில் பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது.600 கழிவறைகள் உள்ளது.இந்த மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தனர்.இந்தியதிபெத் எல்லைக் காவல்படை கொரோனா நோயாளிகளுக்கான இந்த வசதியை செயல்படுத்த பொறுப்பேற்றுள்ளது.