ஹைதிராபாத்தில் ஒருவரின் கல்லீரல், பித்தப்பை, பித்த நாளங்களில் இருந்து 1000 கற்கள் அகற்றம்.!
ஹைதிராபாத்தில் ஒருவரின் கல்லீரல், பித்தப்பை, பித்த நாளங்களில் இருந்து 1000 கற்கள் அகற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்.
ஹைதராபாத் மருத்துவமனையில் கொல்கத்தாவை சேர்ந்த 39 வயது நபரின் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட கற்களை சமீபத்திய அறுவை சிகிச்சையின் போது அகற்றியதாக ஹைதராபாத் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த கற்கள் 5 மிமீ முதல் 50 மிமீ வரையிலான அளவுகளில் வேறுபடுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 39 வயது நபர், கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொடர்ச்சியான பிரச்சனைகளால் அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. இந்த சமயத்தில் அவரது சமீபத்திய அறுவை சிகிச்சையின்போது வற்றில் இருந்து 1,000 கற்கள் அகற்றப்பட்டுள்ளது.