ஆந்திராவில் ஏழை குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் பணம், இலவச ரேஷன் பொருட்கள்.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவவதும் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, செல்லும் தொழிளார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 31 ம் தேதி வரை ஆந்திர எல்லைகள் மூடப்படும் என்றும் ஏழை குடும்பங்களுக்கு தலா 1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த இலவசம் வரும் 31ம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.