ஆற்றில் சிக்கிய 100 மணல் லாரிகள்..!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 100 மணல் லாரிகள் ஆற்றில் சிக்கியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் நந்திகாமா என்ற பகுதி உள்ளது. புலிசெந்துலாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திடீரென நேற்று கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கன்சிகசெர்லா மண்டலம், செவிட்டிகல்லு பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் மணல் எடுப்பதற்காக 100 லாரிகள் சென்றுள்ளது.
இந்த லாரிகள் திடீரென ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் ஆற்றின் மேல் போடப்பட்டிருந்த சாலைகள் நீருக்குள் மூழ்கி லாரி ஓட்டுநர்கள் வெள்ளத்தில் தத்தளித்துளள்னர். இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின்னர் படகுகள் மூலமாக லாரி ஓட்டுநர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.