கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசி தயாரிப்பு – சீரம் நிறுவனம் அறிவிப்பு.!

Default Image

நடுத்தர நாடுகளுக்காக சீரம் நிறுவனம் கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கிறது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவிஷீல்ட் எனும் கொரானா தடுப்பூசியை தன்னார்வலர்களை வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, இந்தியா நடுத்தர வருமான நாடுகளுக்கு கூடுதலாக 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கோவி தடுப்பூசி கூட்டணியிலிருந்து அடுத்த ஆண்டு மேலும் 150 மில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நேற்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டோஸ் வரையிலான ஆரம்ப ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இது கூட்டுத்தொகையின் மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை மொத்தம் 200 மில்லியன் டோஸ் வரை ஆக இருக்கிறது.

இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமெரிக்க பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் இன்க் இன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கத் தொடங்கியது. தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மனித சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்