5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்
5ஜி சேவை பயன்படுத்தகூடிய செயலிகளை உருவாக்குவதற்காக 100 ஆராய்ச்சி மையங்கள் பொறியியல் நிறுவனங்களில் அமைக்கப்படும் என அறிவிப்பு.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்து வருகிறார். குறிப்பாக 7 முக்கிய அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5ஜி சேவை பயன்படுத்தகூடிய செயலிகளை உருவாக்குவதற்காக 100 ஆராய்ச்சி மையங்கள் பொறியியல் நிறுவனங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.