திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி – மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இது மத்திய அரசு நெறிமுறைகளுக்கு எதிரானவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த ஒரு நாள் கழித்து, தற்போது திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் ஊரடங்கு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மத்திய அரசு அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை ரத்து செய்துள்ளது தமிழக அரசு. வேண்டுமானால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் போட்டுக் கொள்ளலாம் என்றும் மறுஉத்தரவு வரும் வரை 50% பறவையாளர்களுக்கும் மட்டும் அனுமதி எனவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025