வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Bihar Assembly

பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார்.

நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் விதிகளின்படி, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்து போட்டி ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகள் அதன் ஆணையின் கீழ் வரும்.

அதன்படி, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், பீகார் யுனிவர்சிட்டி சர்வீஸ் கமிஷன், பீகார் ஸ்டாஃப் சர்வீஸ் கமிஷன், பீகார் டெக்னிக்கல் சர்வீசஸ் கமிஷன், சென்ட்ரல் செலக்ஷன் போர்டு ஆஃப் கான்ஸ்டபிள்ஸ், பீகார் போலீஸ் சப்-ஆர்டினேட் சர்வீசஸ் கமிஷன் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மசோதாவின் கட்டளையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வின் போது தாள் கசிவுக்கான செய்திகளில் வந்த நிலையில், தேர்வு பிபிஎஸ்சியால் ரத்து செய்யப்பட்டு, இந்த மாதம் மீண்டும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்