பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பிய 10 வயது சிறுமி…! என்ன அனுப்பினார் தெரியுமா…?

Published by
லீனா

பிரதமர் மோடியை சந்திக்க விரும்பிய 10 வயது சிறுமி அனிஷா, பிரதமர் மோடிக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

அஹமத்நகர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுஜய் விக் பாட்டீலின் மகளும், மகாராஷ்டிராவின் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விக் பாட்டீலின் பேத்தியுமான அனிஷா பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று மிகவும் அவலாக இருந்தார். இதனையடுத்து, அனிஷா பிரதமர் மோடியை சந்திக்க  தன்னை அழைத்து செல்லுமாறு  கூறியுள்ளார்.

இதனையடுத்து, பாட்டீல் அவரது குழந்தையிடம், பிரதமர் மோடி பிஸியான மனிதர். அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் போகலாம் என கூறினார். அனிஷா அதை கேட்க மறுத்துள்ளார். இதனையடுத்து, அனிஷா தனது தந்தையின் லேப்டாப்பில் பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய மெயிலில், “ஹலோ சார், நான் அனிஷா, நான் உங்களை வந்து சந்திக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இவர் அனுப்பிய மெயிலுக்கு, பிரதமர் மோடி, “டாட் கே சாலி ஆவ் பீட்டா (தயவுசெய்து விரைந்து வாருங்கள்)” என பதிலளித்துள்ளார். பிரதமர் மோடியின் பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார் அனிஷா.

இதனையடுத்து, விகே பாட்டீல்  நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவுடன், பிரதமர் மோடியின் முதல் கேள்வி, “அனிஷா எங்கே?” என்று தான் கேட்டார். பின் அனிஷா பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம், ‘இது உங்கள் அலுவலகமா? உங்கள் அலுவலகம் எவ்வளவு பெரியது! நீங்கள் நாள் முழுவதும் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்களா?’ என கேள்வி  எழுப்பியுள்ளார். சிறுமியின் அத்தனை கேள்விக்கும் பிரதமர் மோடி பொறுமையாக பதிலளித்துள்ளார்.

பின், பிரதமர் மோடி  சிறுமியிடம், நான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன், நான் உங்களுடன் பேச விரும்புகிறேன் என கூறினார். பின் அந்த சிறுமி மோடியிடம், நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர், நீங்கள் எப்போது இந்தியாவின் ஜனாதிபதியாக வருவீர்கள்? என கேட்டுள்ளார். இவரது கேள்வியை கண்டு, பிரதமர் மோடி மற்றும் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.

10 நிமிட சந்திப்பின் போது, ​​அனிஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விளையாட்டு, படிப்பு மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.

Published by
லீனா
Tags: #Modianisha

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

13 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

26 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

42 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

45 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

51 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

56 mins ago